தனது வீட்டிற்கு அருகில் காணப்படும் காவல் நிலையத்திற்குள் பிரவேசித்த குறித்த சிறுவன், வீட்டிற்கு அருகில் உள்ள வீதிக்கு போகக்கூடாது என்றும், ஆறுகள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் அருகே போகக் கூடாது என்றும் தனது தந்தை திட்டுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் தனக்கு அடிப்பதாகவும் கூறியதுடன் தனது தந்தையை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் கூறியுள்ளார்.
பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் மீது அதீத பாசம் இருந்தாலும், தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக வரவேண்டும் என்ற நோக்கில் சில சந்தர்ப்பங்களில் தவறிழைக்கும் போது எம்மைத் தண்டிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த சிறுவனின் குறும்புத்தனமான முறைப்பாட்டைக் கேட்டு காவல் நிலையத்தில் இருந்த அனைவரும் புன்னகை கலந்த முகத்துடன் சிறுவனை அழைத்துச் சென்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின்னர், தந்தையின் சொற்படி நடக்க வேண்டும் என்று குறித்த சிறுவனுக்கு புத்திமதி கூறிய காவல்துறையினர் பல பரிசுப்பொருட்களையும் அவருக்குக் கொடுத்துள்ளனர்.