‘பசங்க’ திரைப்படம் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் பாண்டிராஜ். இவர் ஒரு தயாரிப்பாளரும் ஆவார்.
இயக்குநர் பாண்டிராஜ் இப்பொழுது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக சமீபத்தில் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி - நித்யா மேனன் ஜோடி ஏற்கனவே “19(1)(a)” என்ற ஒரு மலையாளத் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆனால் தமிழில் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ‘பரோட்டா மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், இதற்காக அவர் சில நாட்களாக பரோட்டா மாஸ்டர் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே மக்கள் செல்வனின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தைக் காண இரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றார்கள்.