Sooriyan Gossip - அவுஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் சிறப்பு டெஸ்ட் போட்டி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
211 Views
டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பமாகி 150 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. குறித்த போட்டியில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் பூர்த்தியானதைக் கொண்டாடும் விதமாக அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.