இந்தியாவின் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த லொறி சாரதி ஒருவர் தன்னுடைய YouTube Channel மூலமாக பிரபலமான சமையற்கலை நிபுணராக மாறிவரும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
லொறி சாரதியாக இருக்கும் தனக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகம் என்றும் அந்த ஆர்வத்தின் காரணமாகவே தான் சமையல் தொடர்பான YouTube Channel ஒன்றை ஆரம்பித்ததாகவும் தற்போது இதன் மூலமாக ஒரு மாதத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாரதியாக அனுபவம் கொண்டவர் என்பதுடன் தான் YouTube Channel ஒன்றை ஆரம்பித்த காலப்பகுதியில் பெரிதாக வரவேற்பு இல்லை என்றாலும், தற்போது சுமார் 18 லட்சம் Subscribers உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு இடங்களில் லொறி ஓட்டிச் செல்லும் போது, அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு லொறியிலேயே சுவாரஸ்யமான முறையில் சமைத்து சாப்பிடுவதுடன் அதனைக் காணொளியாகப் பதிவுசெய்து அதனையே தனது YouTube Channel இல் பதிவேற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.