இவர் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
அதனைத் தொடர்ந்து, தனுஷுடன் இணைந்து குபேரா என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.
அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப்பின் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில், ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களில் உணவு, சிரிப்பு, தூக்கம், பயணம், நல்ல புத்தகம்,Coffee மற்றும் அவரது நாய்க்குட்டி என எல்லாவற்றையும் பதிவு செய்து இவை அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமென பதிவிட்டுள்ளார்.
இவை அனைத்தையும் தனித்தனியாக பதிவிட்டு அதற்கு ஏற்ப விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், இவை அனைத்தும் தான் என் வாழ்க்கையில் எனக்கு மகிழ்ச்சி தரும் விடயங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.