பொதுவாக கீரைகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவிலான சத்துக்களையும் கொண்டுள்ளன. கீரைகள் இயற்கை எமக்கு அளித்துள்ள அருட்கொடையாகும். உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அந்த வகையில் குறிஞ்சாக்கீரையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
குறிஞ்சாக்கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து மிளகாய்த்தூள் சேர்க்காமல் வேகவைத்து நன்கு கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். அத்துடன் வயிற்றுப் பூச்சிகளும் நீங்கும்.
குறிஞ்சாக்கீரையை நிழலில் உலர்த்தி தூளாக்கி தினமும் காலையில் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் நோயின் தாக்கம் ஏதுமின்றி ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.
இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக்கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல் நீங்கும்.
குறிஞ்சாக்கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய்த் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
எனவே நன்மை பயக்கும் இந்த குறிஞ்சாக்கீரையை மேற்கூறப்பட்ட முறையின் படி உட்கொண்டு, ஆரோக்கியமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.