1997ஆம் ஆண்டு 'நேருக்கு நேர்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான நந்தா,மௌனம் பேசியதே,
காக்க காக்க, பிதாமகன், பேரழகன்,கஜினி, ஆறு,அயன், 'ஆதவன், 7ஆம் அறிவு, சிங்கம், உள்ளிட்ட பல திரைப்படங்கள் மக்கள் மனங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்தன.
இதேவேளை சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. 3D யில் உருவாகும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளிவர உள்ள நிலையில் இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இதனிடையே நடிகர் சூர்யாவின் 45ஆவது திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்திற்கு 'ஜெர்மன்' என பெயரிடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தத் திரைப்படத்தின் பூஜை நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.