நாய்களின் மொழியைப் புரிந்து கொள்ளக்கூடிய மென்பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
நாய்கள் குரைக்கும் சத்தத்தைப் புரிந்துகொள்ள உதவும் மென்பொருளை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பம், நாய் குரைப்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை சாத்தியமாக்கியுள்ளது. அத்துடன் குரைக்கும் நாயின் பாலினம், இனம், ஏன் வயதைக் கூட மதிப்பிட உதவும்.
நாய் குரைக்கும் போது வெவ்வேறு அதிர்வெண்கள், தீவிரம் மற்றும் ஒலி வடிவங்களைப் பகுப்பாய்வு செய்யும் செயற்கை நுண்ணறிவு நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களையும் சாத்தியமாக்குகிறது.
நாய் குரைக்கும் சத்தத்தைப் பதிவு செய்யும் இந்த மென்பொருள் அதை டிஜிட்டல் சிக்னலாக மாற்றுகிறது. டிஜிட்டல் சிக்னலாக மாறிய குரைப்புச் சத்தம், தரவுத்தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நாய்களின் குரைப்பு சத்தம் மற்றும் அது தொடர்பான தரவுகளுடன் ஒப்பிடப்படும்.
ஆயிரக்கணக்கான நாய்கள் குரைக்கும் ஒலிகளைப் பதிவு செய்து அதற்கான விபரங்கள், தரவுகள் என அனைத்தும் பதிவேற்றப்பட்டிருக்கும். பயிற்சியளிக்கப்பட்ட AI மாதிரியில் இருந்து கிடைக்கும் தரவுகளுடன், டிஜிட்டல் சிக்னல் ஒப்பிடப்பட்டு, தகவல்கள் கொடுக்கப்படுகிறன.
கால்நடை மருத்துவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். நாய்களுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிய உதவும். இந்தப் புதிய தொழில்நுட்பம் விரைவில் அனைவரது பயன்பாட்டுக்கும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.