Sooriyan Gossip - NSL ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
90 Views
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான (2024) தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலி, கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய அணிகள் மோதவுள்ள இப்போட்டித் தொடரானது இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை நடைபெறும்.
ஒவ்வொரு அணியும் ஆரம்ப சுற்றில் 8 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒக்டோபர் 6ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
தேசிய சுப்பர் லீக் ஒருநாள் போட்டித் தொடரானது கொழும்பு , கண்டி, தம்புள்ளை ஆகிய 3 மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.