உலகின் பணக்கார நகரம் எது தெரியுமா? இந்த நகரத்தில், பெரும்பான்மையான மக்கள் பணக்காரர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நகரத்தில் வசிக்கும் 24 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பதோடு குறித்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. இந்த நகரம் எங்கிருக்கிறது தெரியுமா?
உலகின் பணக்கார பெருநகரமாக நிற்கும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் தான் அது. பிரபல தரப்படுத்தல் நிறுவனம், உலகின் முதல் 10 பணக்கார நகரங்களை சிறப்பித்துக் காட்டும் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதிக சொத்து மதிப்பு, செழுமையான பாரம்பரியம், புவியியல் நிலப்பரப்பு, நிறுவன மற்றும் பிராந்திய மேம்பாடு ஆகியவற்றைக் கொண்ட குடியுரிமை பெற்ற மில்லியனர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்நிறுவனம் நகரங்களை மதிப்பீடு செய்துள்ளது.
அதன்படி, நியூயோர்க்கில் சுமார் 3,49,500 மில்லியனர்கள் வசிக்கின்றனர். 2012 மற்றும் 2022-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இங்கு வசிக்கும் கோடீஸ்வர நபர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.