ஈராக் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) கணினியான அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலமாக இலகுவாக நோய்களைக் கண்டறிய முடியுமென தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோயாளிகளின் நாக்கு மஞ்சள் நிறமாகவும், புற்றுநோய் நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் ஊதா நிறமாகவும், மூளை பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
2000 ஆண்டுகள் பழமையான சீனாவின் பாரம்பரிய மருத்துவம் தான் நாக்கின் நிறங்கள் மூலம் நோயைக் கண்டறிய ஊக்கமளித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
5,200 படங்களைப் பயன்படுத்தி நாக்கின் நிறத்தின் அடிப்படையில் நோயைக் கண்டறிவதில், இந்த AI தொழில்நுட்பம் பயிற்சி பெற்றுள்ளது. நிறங்களின் அடிப்படையில் என்ன நோய் என்பதை AI சரியாக மதிப்பிடுகிறது.
மருத்துவத் துறையில் இந்த கண்டுபிடிப்பு இன்றியமையாதது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.