Sooriyan Gossip - தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் மொஹமட் சிராஸிற்கு வாய்ப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
93 Views
தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் பங்கெடுக்கும் இலங்கை A கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கான குழாம்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி இந்த சுற்றுப் பயணத்திற்கான ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட தொடர்களுக்கான இலங்கை A அணியின் தலைவராக பசிந்து சூரியபண்டார தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அத்துடன் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளில் முன்னணி வேகப்பந்து பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் அனுபவமிக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஓஷத பெர்னாண்டோ நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார். இன்னும் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரரான நுவனிந்து பெர்னாண்டோ, சகலதுறை வீரர் ஜனித் லியனகே ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.