தளபதி விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் GOAT.
இத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் Promotion பணிகள் மிகவும் தீவிரமான முறையில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் படக்குழுவினர் மலேசியாவில் இடம்பெற்ற ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் இயக்குநர் வெங்கட் பிரபு, தான் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படத்தைப் பற்றிய தகவலைக் கூறியுள்ளார்.
அதாவது வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்ட திரைப்படங்களில் நடித்து முடித்தபின் இத்திரைப்படத்திற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.