இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல செய்திகளும் தகவல்களும் போலியானவையாகவும் தவறானவையாகவும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தற்போது 23 வயதாவதாகவும் இந்த வயதில் தனக்கு 24 குழந்தைகள் இருப்பதகவும் காணொளி ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
24 குழந்தைகளுள் இரட்டைக் குழந்தைகள் உள்ளதாகவும் அந்தக் குழந்தைகளுக்கு 2 வயது முதல் 18 வயது எனவும் அந்த காணொளியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் காணொளி அதிகளவானோரினால் பகிரப்பட்ட நிலையில் இது தொடர்பில் பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர் கூறிய விடயங்களை ஆராய ஒரு குழுவினர் நேரடியாக குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் அந்தப்பெண் கூறியவை அனைத்தும் பொய் என்பது தெரியவந்துள்ளது.
அத்தோடு அவருக்கு மொத்தம் 2 பிள்ளைகள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் வெளியிட்ட காணொளி தொடர்பில் அங்கு சென்ற குழுவினர் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் தனது வீட்டில் வளர்த்து வரும் மரங்களையும் தன்னுடைய குழந்தைகளாக நினைப்பதாக கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் அனைவரையும் நகைப்பிற்குள்ளாக்கியுள்ளதுடன் அப்பெண்ணை பலரும் எச்சரித்து வருகின்றனர்.