திரைக்கு வரும் முன்பே தயாரிப்பாளருக்கு பல கோடிகளைக் கொடுத்த GOAT!
தளபதி விஜய், Top Star பிரஷாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள GOAT திரைப்படமானது எதிர்வரும் செப்டம்பர் 5ம் திகதி திரைக்கு வரவிருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இத் திரைப்படமானது நாளுக்கு நாள் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் வியாபாரம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
GOAT திரைப்படத்தின் செலவானது 333 கோடி ரூபாய்கள் எனக் கூறப்படுகிறது. இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் 200 கோடி ரூபாய்கள் எனவும் ஏனைய நடிகர், நடிகைகளின் சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கான செலவோடு சேர்த்து மொத்தமாக ரூ.333 கோடி செலவாகியுள்ளதாம்.
இதன் அடிப்படையில், AGS நிறுவனமானது இத்திரைப்படத்தை ரூ.416 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தியத் திரையரங்க உரிமை, வெளிநாட்டுத் திரையரங்க உரிமை, இசையுரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை மூலமாக ரூ.416 கோடிக்கு இத் திரைப்படத்தை AGS நிறுவனமானது விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலமாக தளபதி விஜய்யின் GOAT திரைப்படமானது திரைக்கு வெளியாவதற்கு முன்பே இந்திய மதிப்பில் ரூ.85 கோடியினைத் தயாரிப்பாளருக்கு இலாபமாக் கொடுத்துள்ளதாகத் தமிழ் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.