இந்தியாவின் ஹைதரபாத் மாநிலத்தில் உள்ள நகர்ப்புறமொன்றில் சுமார் 6 அடி சுற்றளவு கொண்ட குறிப்பிட்ட ஒரு பகுதியில் மாத்திரம் மழை பெய்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
6 அடி சுற்றளவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மாத்திரம் மழை பெய்ததன் காரணமாக ஆச்சரியத்தில் இருந்த அப்பகுதி மக்கள் இந்த விசித்திர மழையில் நனைந்து அதனை காணொளிகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
அரிதான இந்த நிகழ்வை பலர் கண்டுகளித்திருக்கின்ற நிலையில் குறிப்பிட்ட சில அடி தூரம் மாத்திரம் மழை பொழியும் வகையிலான மேகங்களை எளிதில் கணித்து சொல்ல முடியாது என்றும் Radar கருவிகளில் இது பதிவாகாது என்றும் அந்தப்பகுதி வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.