மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'பேட்ட ராப்'.
டி.இமான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
இந்தத் திரைப்படத்தின் Motion Poster, இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றிருக்கின்ற நிலையில் இந்தத் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.