பொதுவாக எல்லோருக்குமே பூக்கள் என்றால் அலாதிப் பிரியம் எனலாம். அழகான பூக்கள் மாலை கட்டுவதற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் பயன்படுகின்றன.
அந்தவகையில் செம்பருத்திப்பூவில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
செம்பருத்திப் பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. உடலில் அதிகளவு Cholesterol இருக்கும் போது இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம். இதற்கு சிறந்த தீர்வாக செம்பருத்திப் பூவை பயன்படுத்தலாம். செம்பருத்திப் பூவின் சாற்றைப் பிழிந்து அருந்துவதனால் உடலில் உள்ள மொத்த கொழுப்பின் அளவு 22% வரை குறைக்கப்படுகிறது.
மேலும் செம்பருத்திப் பூவை காய வைத்து தூளாக்கி பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் அருந்தி வர இதயம் பலமாகும்.
செம்பருத்திப் பூவின் சாறு, எமது உடலில் D செல்கள் மற்றும் B செல்களைத் தூண்டுகின்றன. இவை நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளது.
அத்துடன் உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்ப்புண், வயிற்றுப்புண் என்பன உண்டாகும். அவர்கள் தினமும் செம்பருத்திப் பூவின் இதழ்களை ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். அதேவேளை செம்பருத்தி இலைகளை தலைக்குப் பயன்படுத்துவதால் கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன் முடி உதிர்வும் தடுக்கப்படுகின்றது.
சூரியனின் புற ஊதா கதிர்களால், எமது சருமத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல், சில தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்தலாம். எனினும் செம்பருத்திப் பூக்களைப் பயன்படுத்துவதன் மூலம் தோல் புற்றுநோயையும் தவிர்க்க முடியும்.
எனவே மருத்துவக் குணம் நிறைந்த செம்பருத்திப் பூவைப் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.