தமிழ்த் திரைப்படத் துறையில் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமாக இருப்பவர் சசிகுமார். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் மூலம் ஒரு நடிகராக அனைவராலும் அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த ‘கருடன்’ திரைப்படத்திலும் நடிகர் சசிகுமார் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்திலும் கதாபாத்திரத்திலும் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் Title மற்றும் Poster இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகியது.
இந்த நிலையில், இத்திரைப்படம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பை இன்று (28|08|24) மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.