Sooriyan Gossip - சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராகிறார் ஜெய் ஷா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
144 Views
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஐ.சி.சி யின் தலைவர் கிரெக் பார்க்லேவ் இம்மாதம் 20ஆம் திகதி மூன்றாவது முறையாக ஐசிசியின் தலைவர் பதவிக்காக போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.
எனவே ICC தலைவர் பதவிக்கு எந்தவொரு எதிர் போட்டியாளர்களும் இல்லாத நிலையில், ஒருமனதாக ஜெய் ஷா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெய் ஷா கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், இதுவரையில் குறித்த பதவியில் நீடித்து வருகின்றார். அதுமாத்திரமின்றி ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராகவும் இவர் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.