அப்பிள்' நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவன் பரேக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
தற்போது 52 வயதாகும் கெவன் பரேக், கடந்த 2013ஆம் ஆண்டு, அப்பிள் நிறுவனத்தில், நிதி திட்டமிடல் மற்றும் ஆய்வுக்குழுவின் துணை தலைவராக பணிக்குச் சேர்ந்தார். அதற்கு முன்னதாக, 'தாம்சன் ராய்ட்டர், ஜெனரல் மோட்டர்ஸ்' நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மின்சார பொறியியல் படிப்பை முடித்த அவர், சிக்காகோ பல்கலையில் M.B.A பட்டமும் பெற்றுள்ளார்.
“கெவனின் அறிவாற்றல், கணிப்பு மற்றும் நிதித்துறை சார்ந்த நிபுணத்துவம் ஆகியவை, அவரை அப்பிளின் அடுத்த சிறந்த CFO தேர்வாக மாற்றி உள்ளது” என, அப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.