நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும். இந்த நார்ச்சத்து தான் நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
வெள்ளரிக்காயில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.
வெள்ளரிக்காயில் வைரஸ், பக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துக்கள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதன் வறட்சியடையாதவாறு பாதுகாக்கிறது.
எனவே அன்றாட உணவில் வெள்ளரிக்காயை சேர்த்து உட்கொண்டு,மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்.