WhatsApp செயலி அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. முதலில் மெசேஜிங் தளமாக மட்டும் இருந்த WhatsApp, Group Chat, Voice Call , Video Call, UPI Payment வசதி என அடுத்தடுத்த அப்டேட்டுகளால் பயனர்களை ஈர்த்து, இன்றைக்கு உலகின் முன்னணி மெசஞ்சர் தளமாக உள்ளது.
WhatsApp மெசஞ்சரை உலகம் முழுவதும் சுமார் 200 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக அறிமுகமாகும் நபர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்கள், தங்களது தொலைபேசி எண்ணுக்குப் பதிலாக User Name ஐ மட்டும் வழங்கினால் போதுமானது.
அதேநேரம், ஒருவருக்கு User Name தெரிந்தால் மட்டும் மெசேஜ் அனுப்ப முடியாது. அறிமுகமில்லாத நபருடன் முதல்முறையாக பேச, User Name உடன் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள Pin இலக்கத்தை Enter செய்ய வேண்டும்.
User Name உடன் நான்கு இலக்க Pin இலக்கத்தையும் உருவாக்க வேண்டும். அதேசமயம், ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ள ஒருவருடன் தனித்தனியாக Pin இலக்கத்தை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இந்த அம்சம் பயனர்களின் ஒப்ஷன் அடிப்படையில் இயங்கும் என தெரிகிறது.
இதன் மூலம் மற்றவர்கள் மெசேஜ் அனுப்புவது தடுக்கப்படும். பயனர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் செய்திகளைக் கட்டுப்படுத்த WhatsApp இந்த வசதியைக் கொண்டு வந்துள்ளது.
தற்போது இந்த அப்டேட், பரிசோதனையில் இருப்பதாகவும், விரைவில் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் WhatsApp பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது.