இலந்தைப் பழம் இயற்கையிலேயே குளிர்ச்சியான தன்மையைக் கொண்டுள்ளது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் இலந்தைப் பழங்களைச் சாப்பிடுவதால் உடல் சூடு தணிந்து, நீர்ச்சத்து இழப்பு தடுக்கப்படுகின்றது.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஞாபகத் திறன் மிகவும் முக்கியம். எனவே மாணவர்களின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் இலந்தைப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
இலந்தைப் பழங்களில் கல்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் இலந்தைப் பழங்களை தினமும் சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
இலந்தைப் பழத்திற்கு பித்தத்தின் அளவை சமச்சீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இலந்தைப் பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
இலந்தைப் பழங்களில் வலியை குறைக்கும் வேதிப் பொருட்கள் அதிகமுள்ளன. எனவே உடல் வலி உள்ளவர்கள் இலந்தைப் பழங்களைச் சாப்பிட்டால் விரைவாக உடல் வலி மற்றும் உடற்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.
இலந்தைப் பழத்திற்கு இரத்தத்தில் இருக்கும் மாசுக்களை நீக்கி இரத்ததை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே அடிக்கடி இலந்தைப் பழங்களை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாக்கப்படும்.
எனவே சிறந்த உடல் ஆரோக்யத்தைத் தரும் இலந்தைப் பழத்தை உட்கொண்டு பலன் பெறுங்கள்.