மெட்டா நிறுவனத்தின் ஓர் அங்கமான WhatsApp ஐ உலகம் முழுக்க 2.9 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிக யூசர்களைக் கொண்ட WhatsApp இல் , நமது கைப்பேசி எண் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் , Voice , Video Call பண்ண முடியும்.
ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க WhatsApp பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தற்போது மக்களே எளிதாக இத்தகைய ஸ்பேம் மெசேஜ் அல்லது அழைப்புகளைத் தவிர்க்க ஓர் முக்கியமான சிறப்பம்சத்தை கொண்டு வர WhatsApp திட்டமிட்டுள்ளது.
இந்த அம்சம் இன்னும் சில மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று WhatsApp தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்பின் தெரியாத நபர்களின் ஸ்பேம் அழைப்புகளை மக்களே எளிதாகத் தடுக்க முடியும் எனக் கூறுகிறது மெட்டா.
இதன்மூலம் WhatsApp இல் மக்களின் பாதுகாப்பு மேம்பட்டு இருப்பதோடு, பெண்களுக்கு இந்த முக்கிய அம்சம் மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பீட்டா வெர்சனில் குறிப்பிட்ட ஒரு யூசர் அதிக முறை Block செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவரின் கணக்கை நீக்குவதற்கான சோதனையும் பீட்டா வெர்சனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
WhatsApp போன்ற Message App இல் Call அல்லது Message செய்வது பாதுகாப்பாகவும், அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
WhatsApp இல் தற்போது அனைத்து யூசர்களும் பயன்படுத்தும் வகையில், தங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர்களை மெட்டா AI மூலம் உருவாக்கிக்கொள்ளும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.