கல்கி 2898 ஏடி’
SooriyanFM Gossip - கல்கி 2898 ஏடி’Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம், ‘கல்கி 2898 ஏடி’. இந்தத் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். Pan India முறையில் ஜூன் 27 ஆம் திகதி வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
அறிவியல் - புராணக்கதை கலவையில் உருவான இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றதோடு இந்திய மதிப்பில் ரூ .1000 கோடி வரை வசூலித்துள்ளது. இந்தநிலையில் இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையில் கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இத்திரைப்படத்தின் தொழில்நுட்பப் பணிகள், Graphics காட்சிகள் என அனைத்தும் முடிவடைய 3 வருடங்கள் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளதுடன், 'கல்கி 2898 ஏடி' படத்தின் 2ஆம் பாகம் 2028ஆம் ஆண்டு தான் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.