ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கைக்கு எதிரான 2ஆவது போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்த ஜோ ரூட், இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
லோர்ட்ஸில் ஜோ ரூட் குவித்த 7ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். அத்துடன் ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் முதல் தடவையாக சதங்கள் குவித்து வரலாறு படைத்தார்.
அது மட்டுமல்லாமல் 111 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதிவேக சதத்தைப் பெற்றார்.
33 வயதாகும் ஜோ ரூட் இதுவரை 34 டெஸ்ட் சதங்களைப் பெற்றுள்ளார். அதேவேளை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 16 சதங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக இதுவரை அவர் 50 சதங்களைக் கடந்துள்ளார். தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் கோலி 80 சதங்களையும் ரோஹித் ஷர்மா 48 சதங்களையும் பெற்றுள்ளனர்.