சில வருடங்களுக்கு முன்னர் பிரபலமான Online உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் Food Delivery Boy ஆக வேலை செய்த நபர் ஒருவர் தற்போது விளம்பர Fashion Model ஆக உயர்ந்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இவரின் வாழ்க்கைப் பயணம், தங்கள் சொந்தக் கனவுகளை நனவாக்கத் துடிக்கும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது.
Fashion Model ஆக வரவேண்டும் என்ற தனது இலட்சியத்திற்காக சுமார் இரண்டு வருடங்கள் Food Delivery Boy ஆகவும் ஒரு வருடம் கடை ஒன்றிலும் பணியாற்றியுள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போது Modeling துறையில் கால் பதித்து தற்போது அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
மேலும் Modeling துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பல காணொளிகளை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.