இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸ்போனன்ட் எனர்ஜியுடன் கூட்டுச் சேர்ந்து " வீர மஹாசாம்ராட்" மின்சாரப் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.
13.5 மீட்டர் நீளமுள்ள இந்த மின்சாரப் பேருந்து இரண்டு ஒக்ஸில்களில் இயங்கும் வகையில், சக்திவாய்ந்த 320 KWH மின்கலத்தைக்
கொண்டுள்ளது. எக்ஸ்போனன்ட் நிறுவனத்தின் 1 மெகாவோட் ரேபிட் Charging தொழில்நுட்பம் மூலம் இந்தப் பேருந்தின் மின்கலத்தை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
"வீர மஹாசாம்ராட் EV" என்று அழைக்கப்படும் இந்த Electric பேருந்துக்கான இயக்கச் செலவு வழக்கமான டீசல் பேருந்துகளை விட 30% வரை குறைவு. 600,000 கி.மீ அல்லது 3,000 வரை Charge செய்து இயக்கக்கூடிய அளவு அற்புதமான மின்கல உத்தரவாதத்துடன் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தொழில்நுட்பம் மின்சார பேருந்துகளை நீண்ட தூரம் இயக்குவதில் உள்ள தடையைப் போக்கும் வகையில் உள்ளது. பேருந்தின் பெரிய மின்கலத்தை Charge செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இது 50 டிகிரி செல்சியஸ் வரை கடுமையான வெப்பநிலையிலும் கூட, சிறப்பாக இயங்க அனுமதிக்கிறது.