தளபதி விஜய், Top Star பிரஷாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள Goat திரைப்படம் இம்மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த வருடம் வெளியாகும் திரைப்படங்களிலேயே இரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ள திரைப்படமும் Goat
தான்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் உறுதியாகியுள்ள நிலையில், அவர் நடிக்கும் இறுதி இரண்டு திரைப்படங்களில் Goat
திரைப்படமும் ஒன்று என்பதால் இரசிகர்கள் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனாலேயே திரைப்படத்திற்கான வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்திய மதிப்பில் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள
இந்தத் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.130 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தால் படத்தின் வெற்றி உறுதியாகிவிடும் என்று படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், Goat படத்தின் தமிழகத் திரையரங்க உரிமையை Romeo Pictures நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ .75 கோடிக்கு வாங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் Goat திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.