நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று கண்கள்.கண்கள் இல்லையென்றால் நம்மால் எந்தவொரு வேலையையும் இயல்பாக செய்யமுடியாது.கண்கள் தான் நமக்கு இந்த உலகின் அழகைக் காண வழிவகுக்கிறது.
ஆனால், இந்த கண்களின் ஆரோக்கியமும், அழகும் நாம் செய்யும் சில வேலைகளால் கெட்டுப் போகின்றன. காரணம், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வேலை, Online வகுப்பு மற்றும் பொழுதுபோக்கிற்காக Tv, Laptop போன்றவற்றை கூடுதலாக பார்ப்பதால் கண் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், கண் பிரச்சினைகள் வராமல் தடுக்க சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
பாவற்க்காய் இலைகளுடன் 6 மிளகைச் சேர்த்து அரைத்து இரவு உறங்குவதற்கு முன்பாகக் கண்களைச் சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண்பார்வைக் குறைபாடு குறையும்.
Carrot உடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றைச் சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டால் கண் மங்கலாக தெரிவது சரியாகும்.
கடுக்காய், நெல்லிக்காய் இரண்டினதும் விதையை நீக்கிக் காயவைத்துப் பொடி செய்து தினமும் 3g வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
அதிக நேரம் Computer, TV மற்றும் Phone பார்ப்பதால் கண்கள் சோர்வடைந்து விடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்களால் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அடிக்கடி கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய், உருளைக்கிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக வெட்டி கண்களுக்கு மேல் வைப்பதால் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
இவ்வாறு ஆரோக்கியமான உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் கண் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.