வெள்ளம் காரணமாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், அங்குள்ள வடோதரா மாவட்டத்தில் அதிகளவான முதலைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.
இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்திருக்கும் அதேவேளை, இதுவரை 25 ற்கும் மேற்பட்ட முதலைகள் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆகியோரினால் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்குண்டு ஊருக்குள் புகுந்த முதலை ஒன்றை தன்னார்வலர்கள் இருவர் சேர்ந்து மோட்டார் வண்டியில் அழைத்துச் சென்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
முதலையிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க அதன் வாயைப் பாதுகாப்பான முறையில் கட்டி அவர்கள் அதனை அழைத்துச் சென்றிருந்ததுடன் இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகளவானோரால் தற்போது பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.