சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியாகிய 'மாமனிதன்' திரைப்படம் இரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது இவருடைய இயக்கத்தில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகின்றது.
கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு, அறிமுக நடிகர்களான ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் இணைந்து நடிக்கின்றனர்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஆண்டிப்பட்டியில் நடைபெற்றன.
அண்ணன், தங்கை உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இம்மாதம் 20 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்தின் Trailer வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.