Shopping , வீட்டு வேலைகளைச் செய்யும் பீட்டா ரோபோ !
SooriyanFM Gossip - Shopping , வீட்டு வேலைகளைச் செய்யும் பீட்டா ரோபோ !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
உலகமே இப்போது இயந்திரமயமாகியுள்ள நிலையில் , பல முன்னணி நிறுவனங்கள் ரோபோக்களை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திவருகின்றன. இந்த ரோபோக்களின் வருகையால் பலர் தொழில் வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில், 1X Technologies என்ற நிறுவனம் NEO Beta என்ற புதிய ரோபோவை உருவாக்கியுள்ளது. இந்த NEO பீட்டா ரோபோ வீட்டு வேலைகளை திறமையாக கையாளவும், அதேவேளை வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக Shopping செல்லவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
25 Kg எடையுள்ள NEO பீட்டா ரோபோ, 1.65 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இந்த ரோபோ சந்தையில் உள்ள போட்டியாளர் ரோபோக்களை விட சிறப்பாக காணப்படுகிறது.
NEO பீட்டா ரோபோவை ஒருமுறை Charge செய்தால், 4 மணி நேரம் வரை தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் NEO பீட்டா ரோபோக்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.