பழங்களில் மிகவும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது அப்பிள் பழம். அப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Vitamin C உள்ளது. ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய Vitamins இதில் உள்ளதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
அப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுவதோடு, அப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெறுவதுடன், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தடுக்கலாம். மேலும் அப்பிள்பழத்தை சாப்பிடுவதன் மூலம், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதுமட்டுமன்றி ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் குறைகின்றது.
அப்பிள் பழம் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் உடல் எடையைக் குறைப்பதிலும் கெட்ட கொலஸ்ட்ரோலை குறைப்பதிலும் அப்பிள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் இதயம் தொடர்பான பிரச்னைகளையும் தடுக்கிறது.