ஆறு வயதான குறித்த சிறுவன் ஆறு மாதத்திற்கும் மேலாக இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில், நன்கொடையாளர் ஒருவர் மாற்று இதயம் வழங்குவதை உறுதிசெய்துள்ள சம்பவம் இச்சிறுவனை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக குறித்த சிறுவனின் நீண்டகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள அதேவேளை கோடிக்கணக்கானவர்களின் உள்ளங்களை இந்த விடயம் கவர்ந்துள்ளது.
தனக்கு மாற்று இதயம் கிடைக்க உதவிய அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் குறித்த சிறுவன் நன்றி தெரிவித்திருந்ததுடன் இந்த காணொளி, பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிறந்து ஐந்து நாட்களுக்குப் பின்னர் குறித்த சிறுவனுக்கு முதலாவது திறந்த இதய அறுவைச் சிகிச்சை நடந்த நிலையில் தற்போது இதய மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சிறுவன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பிரார்த்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.