அதிக சுவையினையும் ஆரோக்கியத்தினையும் தரும் பழங்களில் கொடித்தோடையும் ஒன்று. இந்தப் பழம் மஞ்சள், ஊதா மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும். இந்தப் பழத்தின் மூலமாகக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
இரத்த நாளங்கள், தசைககளைப் பலமாக்க கொடித்தோடை பெரிதும் உதவுகிறது. ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இப்பழத்தை அடிக்கடி கொடுக்கலாம்.
சருமத்தை இளமையாக வைத்திருக்க விரும்புவோர், இந்த கொடித்தோடையை அதிகமாக உட்கொள்ளலாம்.
கொடித்தோடை உடலில் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்கவும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரிகின்றது. மேலும் சளி, இருமல் வராமலும் பாதுகாக்கின்றது.
கொடித்தோடையில் நார்ச்சத்தும் அதிகளவு நிரம்பியுள்ளது. இது, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இப்பழத்தை உண்ணும் போது, பசி உணர்வு அதிகரிக்கும்.
Cholesterol, நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிரச்சினைகளில் இருந்து கொடித்தோடை எம்மைப் பாதுகாக்கின்றது.
எனவே கொடித்தோடையை அதிகமாக உட்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வோம்.