அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த Reflect Orbital நிறுவனம், இரவில் கூட சூரிய ஒளியை வழங்குவதாகக் கூறியுள்ளது.
இரவில் மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நிலையிலும், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்த பிரச்சினைக்குத் தீர்வாக, இரவில் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதற்காக சூரிய ஒளியை விற்பனை செய்ய முடியும் என்றும் Reflect Orbital நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக 57 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 370 மைல் உயரத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றிலும் 33 சதுர அடி மைலார் கண்ணாடிகள் இருக்கும்.
கண்ணாடிகளில் விழும் சூரிய ஒளி பூமியில் நியமிக்கப்பட்ட சோலார் பேனல்களில் பிரதிபலிக்கும், இதனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.