அவை ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும்.
ஆகவே தினசரி சாப்பிடவேண்டிய ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள் எவையென இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பீர்க்கங்காய்
இதில் நார்ச்சத்து, விட்டமின்கள் சி, ஏ, இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் துணை புரியும்.
புடலங்காய்
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக் கொண்ட இந்தக் காய்,சீரான உடல் எடையைப் பேணவும்,செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவிடும் சிறந்த காய்கறியாகும்.இதில் விட்டமின் சி நிறைந்திருப்பதும் கூடுதல் பலம் சேர்க்கும்.
பாகற்காய்
தனித்துவமான கசப்பான சுவை கொண்ட இந்தக் காய் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
பாகற்காயில் விட்டமின்கள் ஏ, சி, கே, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக நிறைந்துள்ளன.
வெண்டைக்காய்
இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட சுவையான காய்கறியாகும்.இது உடல் எடை மேலாண்மைக்கும், செரிமானத்துக்கும் நன்மை பயக்கும்.விட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் Anti Oxidation மிகுந்தது.உடலின் இணைப்புப் பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.