தளபதி விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள 'Goat' திரைப்படம் September 5 ஆம் திகதி (நாளை) வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாளை வெளியாகும் 'Goat' படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜயுடன் பைக்கில் அமர்ந்திருப்பது போல ஒரு காட்சியை எடிட் செய்து தரும் A I
தொழினுட்பத்தை 'Goat ' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்தது.
agsentertainment.heyareweare.com இணையதளத்தில் தங்களுடைய புகைப்படத்தைப் பதிவேற்றி தாங்களும் விஜய்யுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் இரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
'Goat' திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு Release Promo வீடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.