வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளனர்.மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90 களில் நம்மை இரசிக்க வைத்த நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குறிப்பாக நடிகை சினேகா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் ஏற்கனவே வசீகரா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில்,இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் GOAT திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்த நிலையில், GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகை சினேகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகை சினேகா இந்திய மதிப்பில் ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகின்றது.