Android பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த வசதி ஒன்றை Google நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த Update இல் Android யூசர்கள் Google Play Store இல் உள்ள பல்வேறு செயலிகளை ஒரே நேரத்தில் Update செய்ய முடியும்.
புதிய Update ஆனது தற்போதைய நிலையில் அனைவருக்கும் ஒரே நேரத்திலும் கிடைக்காது என்றாலும், வரும் வாரங்களில் உலகம் முழுவதும் இந்த Update அனைவருக்கும் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய வசதியின் மூலம் Android பயனர்கள் முன்னர் இருந்ததை விட வேகமாக செயலிகளை Update செய்ய முடியும். பெரிய அளவிலான செயலி ஒன்று Update செய்யப்படும் போதோ அல்லது Install செய்யப்படும் போதோ அந்த செயலி ஐ Update செய்வது முடிவடைந்தால் தான் அடுத்த செயலியை Install செய்ய முடியும் என்ற நிலை இனி இருக்காது.
ஒரே நேரத்தில் மூன்று செயலிகளை மட்டுமே நீங்கள் Play Store இல் அப்டேட் செய்ய முடியும். ஏற்கனவே உள்ள செயலிகளை Update செய்வது மட்டுமல்லாமல் புதிதாக செயலிகளை Install செய்யும் போதும் இந்த வசதி உங்களுக்கு கிடைக்கும். அதாவது ஒரே நேரத்தில் மூன்று செயலிகளை நீங்கள் Install செய்ய முடியும்.