மலையாளத்தில் வெளியான "மின்னல் முரளி" திரைப்படத்தின் மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டொவினோ தோமஸ்.
தனது தனித்துவமான திறமையான நடிப்பின் மூலம் தனி இரசிகர்கள் பட்டாளத்தையே தன்வசம் வைத்துள்ளார். இதேவேளை தற்போது இவர் அடுத்ததாக "ARM" திரைப்படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.
3D தொழிநுட்பத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இம்மாதம் 12 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. pan india திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படம் மலையாள வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக எடுக்கப்படும் மிகப் பிரம்மாண்ட படைப்பாகக் கருதப்படுகிறது.இந்த நிலையில் blockbuster திரைப்படமான 'KGF' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீலை ARM படக் குழு சந்தித்துள்ளது.
அப்போது இயக்குநர் பிரஷாந்த் நீல் 'ARM' திரைப்படத்தின் Trailer ஐப் பார்த்துவிட்டு இத்திரைப்படத்தின் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.