இந்த நிலையில் மலைப்பாம்புகளுடன் யோகா செய்யும் பெண் ஒருவரின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
கலிபோர்னியாவில் வசித்து வரும் பெண் ஒருவர் ‘பாம்பு யோகா’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ள இந்தக் காணொளிகள் தொடர்பில் பலரும் தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
குறித்த காணொளியில் அந்தப் பெண் கழுத்தில் மலைப்பாம்புகளைச் சுற்றிக்கொண்டு யோகா செய்வதைக் காண முடிகிறது. சுமார் ஒரு மணி நேரம் பாம்புகளுடன் அவர் யோகா செய்கிறார்.
மேலும் “இந்த இடத்தில் பாம்புடன் யோகா செய்ய முடியும். ஒரு மணி நேர அமர்வின் போது ஒவ்வொருவருக்கும் ஒரு பாம்பு வழங்கப்படும். பாம்பு யோகாவை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த யோகா மையம் வேறு ஒருவரினால் நடத்தப்படுவதாகவும் அங்கு, தான் ஒரு பயிற்சியாளராக மாத்திரமே சென்றதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த யோகா மையத்தின் ஆசிரியர் பாம்பொன்றை அவருக்கு கொடுப்பதாகவும் அதனை எவ்வாறு கையாள்வது என்பதற்கான சில வழிமுறைகளையும் அவர் வழங்குவதாகவும் இந்த பாம்புகள் அனைத்தும் விஷமற்ற மலைப்பாம்புகள் என்றும் அவர் கூறியுள்ளார்.