மீன்களைப் போன்று இல்லாமல் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், வெளிர் வெண்மை நிறத்தில் முள் மற்றும் செதில்கள் இல்லாமல் தலையில் 8 கைகளுடன் பெரிய கண்களுடன் காணப்படும் மீன் தான் கணவாய்.
இதில் குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக அடங்கியுள்ளன.அது மட்டுமின்றி எண்ணற்ற கனிமங்களும் விட்டமின்களும் அதிகமாகவே அடங்கியுள்ளது.
இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை சிவப்பு அணுக்களை அதிகப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் கணவாய் மீன் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கணவாய் மீன்களில் உள்ள விட்டமின் B12 இதய நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் பொழுது இதயத்தை பாதுக்காப்பாக வைத்திருப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.
இந்த கணவாய் மீனில் இருக்கும் விட்டமின் B3 இரத்தத்தின் சர்க்கரை அளவை சமச்சீராக வைப்பதற்கு உதவியாக இருக்கிறது.
இந்த மீன்களை வாரத்தில் ஒரு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் ஒவ்வாமை,முடி உதிர்வு, தசைகளின் தளர்வு, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகளுக்கு இவை ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.