அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிக்கும் ரேச்சல் மனலோ என்ற பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். மருத்துவரின் பரிந்துரைப்படி உடல்நிலையை பராமரித்தல், உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ரேச்சல் சுவாச பிரச்சினை உட்பட்ட சில உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார். ரேச்சல் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இது சாதாரணமானது என்று நினைத்துக் கொண்டு இயல்பாக இருந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் ரேச்சலின் இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது.
Apple Watch கொடுத்த Heart Beat Alert காரணமாக அப்பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் விளைவாக விலைமதிப்பற்ற இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
பொதுவாக இதயம் நிமிடத்திற்கு 60 முதல்100 முறை துடிக்கும். ஆனால் ரேச்சலின் இதயத்துடிப்பு திடீரென 150 ஆக அதிகரித்தது. Apple Watch இன் Ekg அம்சம் இந்த Heart Beat எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
முன்பு காணப்பட்ட சுவாசப் பிரச்சினை மற்றும் அசௌகரியம் தவிர, இதயத் துடிப்பின் ஏற்ற இறக்கத்தில் வேறுபாட்டை அவர் உணரவில்லை. ஆனால் இதன் தீவிரம் Apple Watch எச்சரிக்கை மூலம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.