ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான GOAT திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு இந்திய மதிப்பில் 200 கோடி சம்பளமும் ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளமாக 50 கோடியும் வழங்கப்பட்டதுடன், மொத்தமாக 150 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் இந்திய மதிப்பில் ரூ. 126.32 கோடி வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.