முடக்கத்தான் கீரை மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். இது சாதாரணமாக கிராமப் புறங்களில்வேலிகளில் படர்ந்து காணப்படும்.இந்தக் கீரை வாயு தொல்லைகளுக்கு அருமருந்தாகும். முடக்கத்தான் இலை மற்றும் வேர்இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களைக் கொண்டவை.
முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல்,பக்கவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
விளக்கெண்ணெயில் முடக்கத்தான் கீரையை வதக்கி உண்டால் மூட்டுவலி, கை,கால் வலி அனைத்து அகலும்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
எனவே சிறந்த மகத்துவத்தைத் தரும் முடக்கத்தான் கீரையை உட்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.