Sooriyan Gossip - ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
86 Views
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர்கொண்ட ஆப்கானிஸ்தான் குழாத்தில் அனுபவ சகலதுறை வீரர் குல்பதீன் நயீப் இணைக்கப்படவில்லை என்பதுடன், கடைசியாக நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் போட்டியில் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் வேகப்பந்துவீச்சாளர் நவீன் ஷர்டான் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளதுடன், முதன்மை குழாத்திலிருந்த வேகப்பந்துவீச்சாளர்களான பரீட் அஹ்மட் மலீக் மற்றும் 17 வயதான யமா அராப் ஆகியோர் இறுதி குழாத்திலிருந்து வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஹஷ்மதுல்லாஹ் சஹிடி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாத்தில் இப்ரஹீம் ஷர்தான், அஸ்மதுல்லாஹ் ஒமர்ஷாய் மற்றும் ரஹ்மத் ஷா போன்ற முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.