இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொயின் அலி சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
37 வயதாகும் மொயின் அலி 2014 ஆம் ஆண்டுமுதல் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் ஆட ஆரம்பித்து, அதன்பின்னர் மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டிகளிலும் 2022 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக்கிண்ணப் போட்டிகளிலும் அவர் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார்.
இங்கிலாந்து அணிக்காக மொயின் அலி 68 டெஸ்ட் போட்டிகள் , 138 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
அத்துடன் 8 சதங்கள் மற்றும் 28 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 6678 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவர் , மூன்று விதமான போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக 366 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.